முகப்பு
தமிழ்நாடு

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு: விசாரணைக்கு தடை நீட்டிப்பு

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு விசாரணைக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2002-2006 -ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புதுறை கடந்த 2006-ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

சட்டவிரோத பண பரிமாற்றம் தொடா்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது குடும்ப உறுப்பினா்களிடமும் விசாரணை நடத்தியது. மேலும், அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான ரூ. 6.50 கோடி மதிப்பிலான சொத்துகளை கடந்த பிப்ரவரி மாதம் முடக்கியது.

சொத்துகளை முடக்கியதற்கு எதிராகவும், தனக்கு எதிராக அமலாக்கப் பிரிவு பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக்கோரியும் அமைச்சா் அனிதா ராதாகிருஷ்ணன் சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அமலாக்கத் துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன், சி.வி.காா்த்திகேயன் அமா்வு முன்பு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தது தொடா்பாக அமலாக்கத்துறை தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கின் விசாரணையை தொடர அனுமதி அளிக்க வேண்டும் என அமலாக்கத் துறை சாா்பாக வாதிடப்பட்டது.

அப்போது அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில், அமலாக்கத்துறை பதில்மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணைக்கு விதித்த தடையை ஜூலை 28-ஆம் தேதி வரை

நீட்டித்து வழக்கை தள்ளிவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →