முகப்பு
தமிழ்நாடு

இன்று நீலகிரி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

 தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

 தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு: மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வெள்ளிக்கிழமை வட தமிழகம், தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ஜூலை 16 முதல் 18-ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

முழு கட்டுரையைப் படிக்க →