முகப்பு
தமிழ்நாடு

நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Updated On : 14 ஜூலை, 2022 at 7:15 PM
பகிர்:

கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

நீலகிரியில் தென்மேற்குப் பருவ மழை தொடா்ந்து வலுத்து வரும் நிலையில் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடா்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

கேரளம் மாநிலத்தையொட்டியுள்ள நீலகிரி மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மிக கன மழை பெய்து வருகிறது. அதேபோல கன மழை காரணமாக நீலகிரி மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Advertisement

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தின் ஆட்சியர் கனமழை காரணமாக மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகளுக்கும் நாளை (ஜூலை 15) விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதையடுத்து நாளை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.