தமிழ்நாடு

பேளூர் பேரூராட்சியில் 'எனது நகரம் எனது பெருமை' விழிப்புணர்வு முகாம்

DIN


வாழப்பாடி: சேலம் மாவட்டம், பேளூர் பேரூராட்சியில், 'எனது நகரம் எனது பெருமை' திட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மண்டல பேரூராட்சி உதவி இயக்குநர் கணேஷ்ராம் ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில்,  "எனது நகரம் எனது பெருமை" என்ற திட்டத்தின் கீழ் ஜூலை 9 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதி வரை, பேரூராட்சி பகுதியை சுத்தமாக வைத்திருப்பது குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மாணவிகளுக்கு விழிப்புணர்வு கருத்துறை வழங்கிய செயல் அலுவலர் ராமு.

பேளூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயசெல்வி பாலாஜி தலைமையில், துணைத் தலைவர் பேபி, செயல் அலுவலர் ராமு மற்றும் மன்ற உறுப்பினர்கள், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

பேரூராட்சி பகுதியை சுகாதாரமாக தூய்மையாக பராமரிப்பது என அனைவரும்  உறுதிமொழி ஏற்றனர்.

பதாகை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய பணியாளர்கள்.

பள்ளி தலைமையாசிரியை சின்னமணி, ஆசிரியை, ஆசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

இதனைத்தொடர்ந்து,  பொது மக்களுக்கு பேரூராட்சி சார்பில் குப்பைக் கூடைகள் மற்றும் மஞ்சள் பை வழங்கப்பட்டது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT