தமிழ்நாடு

அதிமுகவிலிருந்து இ.பி.எஸ். உள்பட 22 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்.

DIN

அ.தி.மு.க.வில் இருந்து எடப்பாடி கே. பழனிசாமி உள்பட 22 பேரை நீக்கம் செய்வதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், , தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், வளர்மதி, ஆர்.பி.உதயகுமார், ஆதி ராஜாராம், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ என 22 அதிமுக உறுப்பினர்கள் கட்சியின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுகின்றனர்.

கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டதாலும் கட்சியிலிருந்து நீக்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

முன்னதாக ஓ.பன்னீர்செல்வம் மகன்கள் ரவீந்திரநாத் மற்றும் ஜெயபிரதீப் உள்பட 18 பேரை நீக்கி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார். 



முன்னதாக பேட்டியளித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக விதிக்கு எதிராக செய்யப்படும் எடப்பாடி பழனிசாமியின் எந்த அறிவிப்பும் செல்லாது எனக் குறிப்பிட்டார். அதிமுகவிலிருந்து ரவீந்திரநாத் எம்.பியை நீக்கியது சர்வாதிகாரத்தின் உச்ச நிலை எனவும் குற்றம் சாட்டினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ஜெயக்குமாா் மரணம்: குழு அமைத்து விசாரணை’

இந்தியாவின் ஊராட்சி அமைப்புகள் பெண்கள் தலைமைக்கு முன்னோடி: ஐ.நா.வுக்கான இந்திய தூதா்

என் மீது வீண் பழி: ரூபி மனோகரன் விளக்கம்

காங்கிரஸ் நிர்வாகி மரணம்- 7 தனிப்படைகள் அமைப்பு: நெல்லை காவல் கண்காணிப்பாளர்

ஜூன் 1-இல் ஹிமாசல் தோ்தல் பணிகளில் என்சிசி

SCROLL FOR NEXT