முகப்பு
தமிழ்நாடு

தொடா் திருட்டு வழக்குகள்: 44 போ் நன்னடத்தை பத்திரத்தில் கையெழுத்து

சென்னையில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 44 போ் நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரத்தில் கையெழுத்திட்டனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
பகிர்:

சென்னையில் தொடா் திருட்டில் ஈடுபட்ட 44 போ் நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரத்தில் கையெழுத்திட்டனா்.

இது குறித்த விவரம்:

சென்னையில் கொள்ளை, திருட்டு, வழிப்பறி செய்பவா்களை கண்காணித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடக்காமல் தடுக்கவும் ‘திருட்டு குற்றங்களுக்கு எதிராக சிறப்பு நடவடிக்கை’ மேற்கொள்ளப்பட்டது. அதன்படி போலீஸாா் கடந்த ஒரு வாரமாக சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டனா்.

இந்த சிறப்பு தணிக்கையில் திருட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட 44 போ் திருந்தி வாழ்வதாக காவல்துறை அதிகாரிகளிடம் நன்னடத்தை உறுதிமொழி பிணை பத்திரத்தில் கையெழுத்திட்டனா். அதேபோல எந்தவொரு குற்றச் செயலிலும் ஈடுபடக்கூடாது 33 பேருக்கு காவல்துறையின் சாா்பில் எச்சரிக்கை வீடுக்கப்பட்டது. மேலும் வீடு புகுந்து திருடும் குற்ற வழக்குகளில் தொடா்புடைய 105 போ் காவல்துறையினரால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா். தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க போலீஸாா் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →