தமிழ்நாடு

காரைக்குடியில் தென் மண்டல தீயணைப்பு, மீட்புப்படை வீரர்களுக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. 

DIN

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் தமிழ்நாடு தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கான தென் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை காலையில் தொடங்கியது. 

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள உமையாள் விளையாட்டு அரங்கில் இப்போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

தீயணைப்பு மீட்புப் பணிகள் துறை தென் மண்டல துணை இயக்குநர் விஜயகுமார் தீயணைப்பு மற்றும் மீட்புப்படை வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.

இதில், மதுரை, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, நாகர்கோவில் உள்ளிட்ட ஒன்பது மாவட்ட தீயணைப்பு துறை வீரர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மாவட்ட அலுவலர்கள் சத்தியகீர்த்தி, ராஜூ, கல்யாணகுமார், தென்னரசு, சுகுமார், விவேகானந்தன், கணேசன், வினோத், கவிதா ஆகியோர் பங்கேற்றனர்.

முதல் நாள் நடந்த வீரர்களின் அணி வகுப்புப் போட்டியில் திருநெல்வேலி மாவட்ட அணி முதலிடமும், தேனி மாவட்ட அணி இரண்டாமிடமும், விருதுநகர் மாவட்ட அணி மூன்றாமிடமும் பெற்றது. 

மேலும், வீரர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரொனால்டோ 2 கோல்கள்; போர்ச்சுகல் அபார வெற்றி: மறைந்த வீரருக்கு மரியாதை!

3 ஆண்டுக்குப் பின் லாகூரில் முதல் டெஸ்ட்! பாகிஸ்தான் செல்லும் தென்னாப்பிரிக்க அணி!

செப். 9-ல் பஞ்சாப் செல்கிறார் பிரதமர் மோடி!

இட்லி கடை படத்தில் அருண் விஜய்யின் அறிமுக போஸ்டர்!

தென்கொரியா செல்லும் டிரம்ப்! சீன அதிபர் ஷி ஜின்பிங்கை சந்திக்கிறாரா?

SCROLL FOR NEXT