தமிழ்நாடு

சேலம் பெரியார் பல்கலை. தேர்வில் கேட்ட கேள்வியால் சர்ச்சை

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. 

DIN

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. 

முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றுள்ளது. இந்த கேள்வி கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாள் பற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று துணைவேந்தர் ஜெகநாதன் தெரிவித்துள்ளார். 

மேலும் வினாத்தாள் பிற பல்கலை., கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டதாகவும் பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். 

சாதியை ஒழிக்க போராடிய பெரியார் பெயரில் உள்ள பல்கலை.யில் சாதி பற்றி கேட்ட கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT