கோப்புப்படம் 
தமிழ்நாடு

நாளை அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் வழக்கமாக, அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும். அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதால் அடையாறில் உள்ள நட்சத்திர விடுதியில் நாளை மாலை நடைபெற உள்ளது.

அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை பிற்பகல் 3 மணிக்கு நட்சத்திர விடுதிக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுகவில் மொத்தம் 65 எம்எல்ஏக்கள் உள்ள நிலையில், 62 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், 3 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் உள்ளனர். இந்நிலையில் 62 எம்எல்ஏக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் சென்ற நிலையில் நாளை மதியம் சென்னை திரும்ப உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேனும் நஞ்சாகும்!

உள்ளாட்சியில் சீர்திருத்தங்கள்!

மயிலாடுதுறை மதுவிலக்கு டி.எஸ்.பி.க்கு பிடிஆணை

வேண்டும் இந்த விதிமுறைகள்!

வேளாண் அறிவியல் நிலையத்தில் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT