முகப்பு
தமிழ்நாடு

நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்: மநீம வலியுறுத்தல்

நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

நீட் தேர்வு விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று  மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, மருத்துவப் படிப்பிற்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் தோல்வி ஏற்பட்டு விடுமோ என்ற பயத்தால், அரியலூரைச் சேர்ந்த மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அவரது குடும்பத்தினருக்கு மநீம ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.

அனிதாவில் தொடங்கிய தற்கொலைகள் எவ்வளவு காலத்துக்கு தொடரப் போகின்றன? நீட் தேர்வை முன்வைத்து அரசியல் செய்யாமல், இதற்கு நிரந்தரத் தீர்வுகாண அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டிய  காலம் வந்துவிட்டது. இனியும் நம் கண்மணிகளின் உயிரை `நீட்' காவு வாங்குவதை வேடிக்கை  பார்க்கலாமா?. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments