தமிழ்நாடு

பெரியார் பல்கலைக்கழக சர்ச்சை கேள்வி: ஆய்வுக் குழு நியமனம்

DIN

பெரியார் பல்கலைக்கழகத் தேர்வில் கேட்கப்பட்ட சாதிய ரீதியான கேள்வி குறித்து ஆராய உயர்மட்டக் குழுவை நியமித்தது தமிழக அரசு.

சேலம் பெரியார் பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வு வினாத்தாளில் சாதிய ரீதியான கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையாகி உள்ளது. முதுகலை வரலாறு 2-ம் ஆண்டு தேர்வு வினாத்தாளில், 4 சாதிப் பிரிவுகளைக் குறிப்பிட்டு தமிழகத்தில் எது தாழ்த்தப்பட்ட சாதி? என கேள்வி இடம் பெற்றதால்  கடும் சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.

இதுகுறித்து பெரியார் பல்கலைக்கழகம் வருத்தம் தெரிவித்திருந்த நிலையில் இன்று எதனால் இந்தக் கேள்வி கேட்கப்பட்டது என்பது குறித்து ஆராய உயர்கல்வித் துறை விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.

இக்குழுவில் உயர்கல்வித் துறை இணைச் செயலார்கள் இளங்கோ ஹென்றிதாஸ், தனசேகர் மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி விஜயலட்சுமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், விசாரணை அறிக்கையை ஒரு மாதத்திற்குள் சமர்பிக்க வேண்டும் எனவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT