தமிழ்நாடு

மின் கட்டண உயர்வு! ஜூலை 25-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்

DIN

மின் கட்டண உயர்வைக் கண்டித்து ஜூலை 25ஆம் தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அனைத்து மாவட்டங்களிலும் வரும் 25ஆம் தேதி காலை 10 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளார். 

மத்திய அரசின் தொடர் வலியுறுத்தலுக்கு ஏற்ப, தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று அறிவித்தார்.

அதன்படி, 101 யூனிட்கள் முதல் அனைத்து நிலைகளிலும் மின் கட்டணம் உயா்த்தப்படவுள்ளதாகவும் தெரிவித்தார். 
 ரூ.55 முதல் ரூ.1,130 வரை மின் கட்டணம் உயா்கிறது.

மின்கட்டண உயர்வு குறித்து கருத்துகளை அளிக்க மின் நுகர்வோருக்கு 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படுகிறது. ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

இந்நிலையில், மின் கட்டண உயர்வைக் கண்டித்து வரும் 25ஆம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்துள்ளார். 

அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஜூலை 25ஆம் தேதி காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் தொடங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT