தமிழ்நாடு

தமிழகத்தில் புதிதாக 2,142 பேருக்கு கரோனா; சென்னையில் 561

DIN

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,142 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் 561 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் நேற்று 2,223 பாதிப்பு கண்டறியப்பட்ட நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்ட தரவுகள் அடங்கிய விவரங்களை மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், இன்று புதிதாக 2,142 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 35,22,142-ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று கரோனா உயிரிழப்பு இல்லை. எனினும், மொத்த உயிரிழப்பு 38,030 ஆக உள்ளது. 

இன்று ஒரு நாளில் மட்டும் 2,219 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 34,67,283-ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 30,376 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 6.65 கோடி பேருக்கு இதுவரை பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 

சென்னையில் புதிதாக 561 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 296, கோவை 179, திருவள்ளூர் 106, நெல்லை 79, காஞ்சிபுரம் 77, சேலம் 76, திருச்சி 67 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒளவைக்கு திருக்கோயில்!

விமான நிலையத்துக்குமா? தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!

பொறியியல் சோ்க்கை: முதல் வாரத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்

பசித்தோர்க்கு உணவு

உலகமெங்கும் ஒலிக்கும் தமிழோசை!

SCROLL FOR NEXT