டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான தரவரிசைப் பட்டியலை தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
கடந்த மார்ச் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை, குரூப் 1 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வரும் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணல் நடைபெற்றது.
66 பணியிடங்களுக்கான நேர்காணல் அண்மையில் வெளியான நிலையில் தரவரிசைப் பட்டியல் தனது அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.
பட்டியலில் இடம்பிடித்தோர் ஜூலை 29இல் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.