கோப்புப் படம் 
தமிழ்நாடு

உளவுத் துறை ஐஜி உள்பட 7 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

DIN


தமிழகத்தில் 7 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உளவுத் துறை ஐஜி ஆசியம்மாள் பணிடமாற்றம் செய்யப்பட்டு அமலாக்கப்பிரிவு ஐஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக உளவுத் துறை ஐஜியாக செந்தில் வேலனை நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணைய எஸ்.பி.யாக மகேஷ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். 

சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் காவல் கண்காணிப்பாளராக ராதாகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 

சென்னை பூக்கடை காவல் துறை துணை ஆணையராக ஆல்பர்ட் ஜான் நியமிக்கப்பட்டுள்ளார். 

திருவல்லிக்கேணி காவல் துறை துணை ஆணையராக தேஷ்முக் சேகர் சஞ்சய் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழ்நாட்டில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஐபிஎஸ் அதிகாரிகள் சமய் சிங் மீனா, கிரண் ஸ்ருதி, தீபக் சிவச், ஹர்ஷ் சிங், சாய் பிரனீத் ஆகியோருக்கு பதவி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT