சென்னை: சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடக்கி வைக்க ஜூலை 28 ஆம் தேதி பிரதமர் மோடி சென்னை வருகிறார்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் ஜூலை 29-ம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் ஜூலை 28-இல் நடைபெறவுள்ள 44-வது செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக அரசு சார்பில் முறைப்படி அழைப்பு விடுக்கப்பட்டது.
விளையாட்டுப் போட்டிகள் மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தொடர்ச்சியாக நடைபெறுகிறது. இதில் 188 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள் கலந்து கொள்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.