தன்பாத் - ஆலப்புழா ரயிலில் நள்ளிரவில் சோதனை செய்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.
தன்பாத்திலிருந்து ஆலப்புழா நோக்கி சென்று கொண்டிருந்த ரயிலில்(13351) புதன்கிழமை விடியற்காலை 4 மணியளவில் ரயில்வே போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், முன்பதிவு பயணிகளுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியில், முன்பதிவு செய்யாமல் பயணம் செய்த நூற்றுக்கணக்கான வடமாநிலத்தை சேர்ந்தவர்களின் உடமைகளை காவல்துறையினர் சோதனை செய்தனர்.
இந்த சோதனையில், பயணச்சீட்டு எடுக்காமல் ஒடிசா மாநிலத்திலிருந்து பயணம் செய்த இருவரிடமிருந்து சுமார் 12 கிலோ கஞ்சாவை கைப்பற்றினர். தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் திருப்பூரில் பணிபுரிந்து வருவதாக தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.