தமிழ்நாடு

போலி பத்திரப்பதிவு: திருவள்ளூர் சார் பதிவாளர் தற்காலிக பணியிடை நீக்கம்

DIN

திருவள்ளூரில் போலியான பத்திரப் பதிவு செய்ததாக சார் பதிவாளரை பணியிடை நீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி உத்தரவிட்டுள்ளார்.

திருவள்ளூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் சார் ஆட்சியராக பணியாற்றி வருபவர் சுமதி. இந்நிலையில் ஆவடி மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்தைப் போலியாக ஆவணம் தயார் செய்து திருவள்ளூர் சார் பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்துள்ளதாகவும், போலியான ஆவணங்கள் கொண்டு அதிகளவில் பத்திரப்பதிவு திருமணங்கள் செய்து வைத்தாகவும் அவர் மீது தொடர்ந்து பத்திரப்பதிவு ஐஜிக்கு புகார் சென்றது. 

இதையடுத்து சார் பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து பத்திரப்பதிவு ஐஜி சிவனருள் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் திருவள்ளூரில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு செய்ய வந்தவர்கள் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் அவதியுற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமுறைகள் கடந்த தலைவர்களின் வாழ்க்கை!

சஸ்பென்ஸ் த்ரில்லர் 'பிஹைண்ட்'

உழைப்பாளர் தினம்

திரைக் கதிர்

பெங்களூரில் ’டிசிஎஸ் உலக மாரத்தான்’ ஓட்டப்போட்டி

SCROLL FOR NEXT