அப்பாவு (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும்: அப்பாவு

சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் சிறிதளவு கூட மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: எதிர்க்கட்சி துணை தலைவர் மாற்றம் மற்றும் இருக்கைகள் ஒதுக்குவது உள்ளிட்ட விவகாரத்தில் சட்டப்பேரவையின் மாண்பையும், மரபையும் சிறிதளவு கூட மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என சட்டப்பேரவை தலைவர் அப்பாவு  தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக மாணவ-மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு செஸ் போட்டி தொடக்கவிழாவில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அதிமுக கொறடா வேலுமணி கொடுத்த கடிதத்தை இதுவரை பார்க்கவில்லை. சென்னை சென்று கடிதத்தை பார்த்துவிட்டு  முடிவு எடுக்கப்படும் என்றார். நீதிமன்றத்தில்  எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவான தீர்ப்பு வந்தது குறித்து பதில் அளித்த அவர், நீதிமன்றம் வேறு, தேர்தல் ஆணையம் வேறு. அதற்கும் சட்டப்பேரவைக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது என தெரிவித்தார்.  

சட்டப் பேரவையில் இருக்கைகள் கொடுப்பது தொடர்பாக அதிமுக சார்பில்  கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதம் பரிசீலனையில் உள்ளது.  சட்டப்பேரவையின் மாண்பையும் மரபையும் சிறிதளவு கூட மீறாமல் எல்லா முடிவுகளும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லி காற்று மாசுபாட்டால் பெண்களை விட ஆண்களுக்ளே அதிக பாதிப்பு! - ஆய்வில் தகவல்

மாற்றுத்திறனாளி மருத்துவ முகாம் விழிப்புணா்வுப் பேரணி

வரைவு வாக்காளா் பட்டியல் இன்று வெளியீடு

திருப்பரங்குன்றம் தீபம் விவகாரத்தை புதுச்சேரியில் பாஜக எழுப்புவது ஏன்? வெ. வைத்திலிங்கம்

பல்கலைக்கழக அளவிலான கூடைப் பந்து போட்டி: மருதா் கேசரி ஜெயின் மகளிா் கல்லூரி மாணவிகள் சாதனை

SCROLL FOR NEXT