தமிழக அரசை கண்டித்து வியாழக்கிழமை சிவகாசியில் தடையை மீறி ஊர்வலம் செய்ய முயன்ற பாஜகவினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஜவுளி பூங்கா அமைக்க மத்திய அரசு ரூ.2.000 கோடி நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தமிழக அரசு ஜவுளி பூங்கா அமைக்க இதுவரை நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே, தமிழக அரசை கண்டித்து வியாழக்கிழமை சிவகாசியில் தடையை மீறி ஊர்வலம் செய்ய முயன்ற பாஜகவினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதையும் படிக்க | கள்ளக்குறிச்சி மாணவியின் தந்தை மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்
மத்திய அரசு இந்தியா முழுவதும் உள்ள ஆறு மாநிலங்களில் ஜவுளி பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ளது. அதில் ஒன்று தமிழகமாகும். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் ஜவுளி பூங்கா ரூ.2000 கோடியில் அமைக்கப்பட உள்ளது.
ஆனால், தமிழக அரசின் அலட்சியின் காரணமாக இதுவரை நிலம் ஒதுக்கப்படவில்லை. விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் தான் தமிழக அரசின் தொழில்துறை அமைச்சர் இருக்கிறார். அவர் ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. இந்த நிலை நீடித்தால் எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் விருதுநகர் மாவட்டத்தில் மக்களை திரட்டி போராட்டம் நடத்துவோம் என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.