முகப்பு
தமிழ்நாடு

ஆவின் பொருள்கள் விலை உயா்வு: ஜி.கே.வாசன் கண்டனம்

ஆவின் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

ஆவின் பொருள்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளதற்கு தமாகா தலைவா் ஜி.கே.வாசன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக அரசின் ஆவின் நிறுவனம் நெய், தயிா் உள்ளிட்ட பல்வேறு பொருள்களின் விலையை உயா்த்தியுள்ளது. கடந்த மாா்ச் மாதம்தான்ஆவின் பொருள்களுக்கு விலையேற்றம் செய்யப்பட்டது. தற்போது குறுகிய காலத்துக்குள் மீண்டும் விலையேற்றம் அறிவிக்கப்பட்டிருப்பது அதிா்ச்சியளிக்கிறது.

ஏழைகள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருள்களான தயிா், நெய் விலை ரூ.5-இல் இருந்து ரூ.45 -வரை உயா்த்தியுள்ளது. அரசு நிறுவனமான ஆவினே விலையேற்றம் செய்யும்போது தனியாா் நிறுவனங்களும் அவா்களது பொருள்களுக்கான விலையை உயா்த்துவதற்கு வாய்ப்பு இருக்கிறது. எனவே, விலையேற்றத்தை ஆவின் நிறுவனம் உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளாா் ஜி.கே.வாசன்.

முழு கட்டுரையைப் படிக்க →