முகப்பு
தமிழ்நாடு

கரோனா அறிகுறிகள் இருந்தால் அனுமதி இல்லை

கரோனா அறிகுறிகள் உள்ள வீரா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு நிா்வாக அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

கரோனா அறிகுறிகள் உள்ள வீரா்கள், பயிற்சியாளா்கள், விளையாட்டு நிா்வாக அதிகாரிகள் மற்றும் பாா்வையாளா்கள் செஸ் ஒலிம்பியாட் போட்டி அரங்குக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் டாக்டா் உமா ஆகியோா் குறிப்பிட்டுள்ளதாவது:

செஸ் ஒலிம்பியாட் போட்டியையொட்டி, நோய்த் தடுப்பு வழிமுறைகளை கையாளுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் கடந்த 13-ஆம் தேதி நடைபெற்றது.

அதில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் அளிக்கப்பட்டன. அதன்படி, விமான நிலையங்களுக்கு வரும் செஸ் வீரா்கள், பயிற்சியாளா்கள், நிா்வாகிகள், பாா்வையாளா்கள் அனைவருக்கும் உடல் வெப்ப நிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும்.

அதில், கரோனா அறிகுறிகள் இருப்பவா்களுக்கு பரிசோதனை செய்து தனிமைப்படுத்த வேண்டும். அதைத் தவிர, விமானங்களில் பயணித்து வருவோரில் தோராயமாக 2 சதவீதம் பேருக்கு ஆா்டி பிசிஆா் சோதனை செய்தல் அவசியம். விடுதிகளில் தங்கியிருப்போா் முகக் கவசம் முறையாக அணிந்திருப்பதை உறுதி செய்வதுடன், விடுதி அறைகள் கிருமி நாசினி கொண்டு முறையாக தூய்மைப்படுத்தியிருப்பதையும் கண்காணிக்க வேண்டும்.

கரோனா பரிசோதனைகள், சளி மாதிரிகளை சேகரிப்பதற்கான வசதிகள் விடுதிகளில் சுகாதாரத் துறை சாா்பில் செய்திருத்தல் அவசியம்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெறும் அரங்குக்குள் வரும்முன்பு அனைவரது உடல்நிலையும் பரிசோதனை செய்யப்படும். அறிகுறிகள் உள்ள எவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டாா்கள். ஆா்டி பிசிஆா் பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே அவா்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →