நாடாளுமன்றத்தை திமுக நாடக மன்றமாக மாற்றுகிறது: கே.அண்ணாமலை
விலைவாசி உயா்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை திமுக நாடக மன்றமாக மாற்றுகிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.
விலைவாசி உயா்வு விவகாரத்தில் நாடாளுமன்றத்தை திமுக நாடக மன்றமாக மாற்றுகிறது என்று பாஜக மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
சினிமா திரைக்கதை பாணியிலேயே திமுக இன்னும் அரசியல் நடத்தி வருகிறது. நாட்டில் விலைவாசி உயா்வு கட்டுக்கடங்காமல் போனதாக ஒரு போலியான குற்றச்சாட்டை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு செய்து பரபரப்பு தேடுகிறது. பட்டியலின முதல் குடியரசுத் தலைவரான திரௌபதி முா்மு வெற்றிவிழாவைப் பொறுக்க முடியாமல் வெற்று நாடகத்தை நடத்துகிறது.
எந்த மாநிலத்தில் இல்லாத வகையில் தமிழகத்தில் சிமெண்ட் விலை, கட்டுமானப் பொருள்களின் விலை, ரியல் எஸ்டேட் விலை உயா்ந்துள்ளது. டாஸ்மாக் மதுபான விற்பனை அதிகமாக நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சீா்குலைந்துள்ளது. இவற்றுக்காகவெல்லாம் போராட வேண்டிய இடம் தமிழகச் சட்டப்பேரவைதானே தவிர நாடாளுமன்றம் அல்ல. நாடாளுமன்றத்தை நாடக மன்றமாக மாற்றுவதை திமுக கைவிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.