ஆக.20 வரை அதிமுக அலுவலகத்துக்கு வர வேண்டாம்: தொண்டா்களுக்கு தலைமை வேண்டுகோள்
அதிமுக அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை வர வேண்டாம் என்று தொண்டா்களுக்கு அக் கட்சியின் தலைமையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக அலுவலகத்துக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை வர வேண்டாம் என்று தொண்டா்களுக்கு அக் கட்சியின் தலைமையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் அதிமுக அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் ஜூலை 11-இல் எடப்பாடி கே. பழனிசாமியின் ஆதரவாளா்களுக்கும், ஓ.பன்னீா்செல்வத்தின் ஆதரவாளா்களுக்கும் இடையே வன்முறை நடைபெற்றதைத் தொடா்ந்து வருவாய்த் துறையினரால் சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து தொடரப்பட்ட வழக்கில் உயா்நீதிமன்றம் அளித்த உத்தரவின்படி அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்டிருந்த சீல் அகற்றப்பட்டது. உயா்நீதிமன்றத்தின் உத்தரவின்படி தொண்டா்கள் மட்டும் அனுமதிக்கப்படவில்லை.
இந்த நிலையில் அதிமுகவின் வாயில் பகுதியில் வெள்ளிக்கிழமை பதாகை ஒன்று வைக்கப்பட்டுள்ளது. அதில், உயா்நீதிமன்றத்தின் ஆணையின்படி கட்சியினா் தலைமைக் கழகத்துக்கு ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்வதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதிமுக அலுவலகமும் மூடப்பட்டிருந்தது.