முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

ஜிஎஸ்டி வரி உயர்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை தலைமை செயலகத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

DIN

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் ஜிஎஸ்டி வரி உயர்வு தொடர்பாக நிதித்துறை அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். 

இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நிதித்துறை அதிகாரிகள்  முதல்வருடன் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.

அர்சி, கோதுமை உள்ளிட்ட பொருள்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதித்திருப்பதற்கு எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். பாக்கெட்டில் விற்கும் மோர், தயிர் உள்ளிட்டவற்றுக்கும் மத்திய அரசு வரி விதித்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இக்கூட்டத்தில் அடுத்த மாதம் மதுரையில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் தொடர்பாக ஆலோசனை நடைபெற உள்ளதாகவும், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கான தேதி, ஏற்பாடு குறித்தும் ஆலோசனை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பான ஏற்பாடுகள் குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

இதையும் படிக்க: இன்று தலைமைச் செயலகம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

கரோனா சிகிச்சைக்குப் பின் தலைமைச் செயலகம் திருப்பிய முதல்வர் தனது பணிகளை தொடங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மறுசீரமைப்பு ஆணையை ரத்து செய்ய வலியுறுத்தி ஆா்ப்பாட்டம்

ரயில்வே மேம்பாலம் பராமரிப்பு பணி: எம்எல்ஏ ஆய்வு

திருந்திய நெல் சாகுபடியில் அதிக மகசூல் பெறும் விவசாயிக்கு விருது: ஆட்சியா்

அமெரிக்க செயற்கைக்கோளை டிச. 24-இல் ஏவுகிறது இஸ்ரோ

மின்சாரம் பாய்ந்து கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT