கோப்புப்படம் 
தமிழ்நாடு

நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதி: ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

DIN

சென்னை: அதிமுகவில் இருந்து பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்ட நிர்வாகிகள் மீண்டும் செயல்பட அனுமதிக்கப்படுவார்கள் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

மேலும், ரத்து செய்யப்பட்ட ஊராட்சி செயலாளர், தொகுதி செயலாளர், தொகுதி இணைச் செயலாளர் பதவிகள் மீண்டும் தோற்றுவிக்கப்படும். ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் அந்தந்த பொறுப்புகளில் பணியாற்ற அனுமதிக்கப்படுவார்கள். காலியாக உள்ள பொறுப்புகள் விரைந்து நிரப்பப்படும் என்று ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமியால் நீக்கபட்டவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளில் செயல்பட அனுமதிக்கப்படுவதாக ஓ.பன்னீர் செல்வம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிமுகவின் பெயரில் உள்ள 3 கணக்குகள், அதிமுக தலைமைக் கழக கட்டட நிதி கணக்கு ஆகியவற்றை முடக்க கோரிக்கைவும், 7 வங்கிக் கணக்குகள், 2 வைப்பு நிதி கணக்குகளை முடக்க ரிசர்வ் வங்கி மண்டல இயக்குநருக்கு ஓ.பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

தேர்தல் ஆணையம் இறுதி முடிவு எடுக்கும் வரை தாம்தான் அதிமுக பொருளாளர் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

நடுவரை நீக்கும் கோரிக்கையை மீண்டும் நிராகரித்த ஐசிசி; ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் தொடருமா?

யுசிஎல்: ரியல் மாட்ரிட்காக இளம் வயதில் களமிறங்கி சாதனை! அடுத்த மெஸ்ஸியா?

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 25 காசுகள் உயர்ந்து ரூ.87.84 ஆக நிறைவு!

SCROLL FOR NEXT