முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் பகுதியில் இடியுடன் கூடிய மழை: தலைஞாயிறில் 60 மிமீ எனப் பதிவு

நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.

Updated On : 23 ஜூலை, 2022 at 10:05 AM
வேதாரண்யம் அடுத்த பஞ்சநதிக்குளம் கிராமத்தில் நெல் தரிசு வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்.
பகிர்:

வேதாரண்யம்: நாகை மாவட்டம், வேதாரண்யம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்று, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஏற்பட்டது.

வேதாரண்யம் அருகே வாய்மேடு, கரியாப்பட்டினம் சுற்றுப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் லேசான மழைப் பொழிவு இருந்து வந்தது

இந்த நிலையில், பலத்த காற்று, இடியுடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கிய மழை சனிக்கிழமை அதிகாலை வரை நீடித்தது.

Advertisement

வேதாரண்யம் நகரப் பகுதியைவிட கிராமப்புறங்களில் அதிகமாக உணரப்பட்டது.

சனிக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வேதாரண்யத்தில்  32.6 மி.மீ., கோடியக்கரையில் 60.4 மி.மீ., கோடியக்கரையில் 30 மி.மீ. மழை பதிவானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.