முகப்பு
தமிழ்நாடு

23 மாவட்டங்களில் ஜூலை 27-இல் பலத்த மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரி, தருமபுரி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூலை 27) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:52 AM
பகிர்:

கோவை, நீலகிரி, தருமபுரி, மதுரை, கன்னியாகுமரி உள்ளிட்ட 23 மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூலை 27) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 24) முதல் செவ்வாய்க்கிழமை (ஜூலை 26) வரை ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூா், கள்ளக்குறிச்சி, கரூா், நாமக்கல், திருச்சி, பெரம்பலூா், மதுரை, சிவகங்கை, விருதுநகா், தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →