நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், நீரஜ் சோப்ரா மீண்டும் ஒருமுறை வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக தடகள போட்டியில் பதக்கம் வென்ற இந்தியாவின் 2ஆவது நபர் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்துக்கள். அவரது சாதனையால் நாடே பெருமிதம் கொள்கிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க- மேட்டூர் அருகே மின்சாரம் பாய்ந்து யானை உயிரிழப்பு
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு 19 ஆண்டுகள் கழித்து பதக்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பு கடந்த 2003ஆம் ஆண்டு நீளம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் அஞ்சு பாபி ஜார்ஜ் பதக்கம் வென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து 19 ஆண்டுகள் கழித்து 23 வயதான நீரஜ் சோப்ரா தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.