தமிழ்நாடு

இபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கு: நாளை விசாரணை

DIN

நெடுஞ்சாலை ஒப்பந்தத்தில் முறைகேடு விவகாரத்தில் சிபிஐ விசாரணையை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை (ஜூலை 26) விசாரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைகளுக்கு ஒப்பந்தங்களை வாங்கியதில் ரூ.4,800 கோடி முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். 

கடந்த 2018ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தலாம் என அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

இவ்வழக்கில் விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதன்பிறகு இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்தது.  

தமிழக அரசு தரப்பில் இவ்வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா அமர்வில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நாளை விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

சுட்டுவிடுவேன் என மிரட்டி வன்கொடுமை: ரேவண்ணாவுக்கு எதிராக புகார்

12 ஆண்டுகளுக்குப் பின் மும்பையை வீழ்த்திய கொல்கத்தா: ஷாருக்கான் மகள் கூறியது என்ன தெரியுமா?

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்!

ஜார்க்கண்டில் பிரதமர் மோடிக்கு அமோக வரவேற்பு!

SCROLL FOR NEXT