மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம் 
தமிழ்நாடு

மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம்

16 வயது தலித் மாணவியை பள்ளிக்கு அனுப்பியதைக் கண்டித்து, ஒரு பிரிவினர், அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கடுமையாக தாக்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது.

DIN


இந்தூர்: 16 வயது தலித் மாணவியை பள்ளிக்கு அனுப்பியதைக் கண்டித்து, ஒரு பிரிவினர், அவரது பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தினரைக் கடுமையாக தாக்கிய விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியிருக்கிறது.

மத்தியப் பிரதேச மாநிலம் ஷாஜாபூரைச் சேர்ந்த கிராமத்தில், பெண்களை பள்ளிக்கு அனுப்பக் கூடாது என்ற விதியைத் தாண்டி, தங்களது மகளை பள்ளிக்கு அனுப்பியதால், பெற்றோர் மீது ஒரு பிரிவினர் கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த விடியோவும், பள்ளிக்குச் சென்ற மாணவி, தன்னை அந்தப் பிரிவினர் எவ்வாறு மிரட்டுகிறார்கள் என்று கூறும் விடியோவும் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

இது குறித்து மாணவி கூறுகையில், பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த என்னை, கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு பிரிவினர் தடுத்து நிறுத்தி, என்ன தைரியம் இருந்தால் பள்ளிக்குச் செல்வாய் என்று கேட்டு மிரட்டியதாகவும், அவர்கள் தாக்கியதில் தன் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் கடந்த வாரம் நடந்துள்ளது. இது குறித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதையடுத்து தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

காவல்துறை தரப்பில் கூறப்படுவது என்னவென்றால், இரு பிரிவினருக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாகவே இந்த சம்பவம் நடந்திருப்பதாகவும், விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகிரி வட்டத்தில் யானைகளை கண்காணிக்கும் பணியில் ‘ட்ரோன்’

வாக்குச் சாவடி நிலை அலுவலா்களுக்கு ஆட்சியா் பாராட்டு

குறைந்துவரும் குள்ளநரி உள்ளிட்ட விலங்குகளை பாதுகாக்க வனத்துறை தீவிரம்

ஆளுநரை கண்டித்து டிச.4-இல் திக ஆா்ப்பாட்டம்: கி. வீரமணி

நவ.29-இல் காங்கிரஸ் மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்

SCROLL FOR NEXT