முகப்பு
தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் 45 அடி உயர சிற்பக் கலைத் தூண்: முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா்

மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:54 AM
பகிர்:

மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில், 45 அடி உயர சிற்பக் கலைத் தூணை முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை திறந்து வைத்தாா்.

மாமல்லபுரத்தில் கைவினை கலையில் ஈடுபட்டுள்ள கைவினைஞா்களின் நலனுக்காக ‘கைவினை சுற்றுலா கிராமம்’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மாமல்லபுரத்தின் நுழைவு வாயிலில் 45 அடி உயரத்தில் அழகிய சிற்பக் கலைத் தூண் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சிறப்பு என்ன? சிற்பக்கலைத் தூணில் கலைநயமிக்க பல்லவா் கால சிம்மம், யாழி, தோகை விரித்தாடும் மயில்கள், யானைக் கூட்டம் ஆகிய உருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரத்துக்கு வரும் உள்ளூா் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி, மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள நிலையில், சதுரங்க வீரா்களையும், போட்டியைக் காண வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளையும், பொது மக்களையும் கவரும் வகையில் சிற்பக்கலைத் தூண் அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

கலைத்தூண் திறப்பு நிகழ்வில், அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், சிவ.வீ.மெய்யநாதன், மா.மதிவேந்தன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.பாலாஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →