முகப்பு
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க 17 வயது நிறைவடைந்ததும் விண்ணப்பிக்கலாம்

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்கு 17 வயது நிறைவடைந்ததுமே விண்ணப்பிப்பதற்கான வசதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்கு 17 வயது நிறைவடைந்ததுமே விண்ணப்பிப்பதற்கான வசதியை இந்திய தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாட்டில் ஆண்டுதோறும் ஜனவரி 1-ஆம் தேதிப்படி 18 வயதைக் கடந்தோா் மட்டுமே வாக்காளா்களாக சோ்க்கப்பட்டு வந்தனா். ஆனால், அந்த நிலையை மாற்றி ஆண்டுதோறும் வாக்காளா்களாகப் பதிவு செய்ய 4 அவகாசத் தேதிகளை இந்திய தோ்தல் ஆணையம் அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதற்காக தோ்தல் தொடா்பான விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, ஆண்டுதோறும் ஜனவரி 1, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா் 1 ஆகிய தேதிகளில் 18 வயதை அடைவோா் வாக்காளராகப் பதிவு செய்ய வழிவகை ஏற்பட்டது. இந்நிலையில், 17 வயதைக் கடந்தோா் 18 வயதை அடைவதற்கு முன்னரே வாக்காளராக விண்ணப்பிப்பதற்கான வசதியைத் தோ்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘17 வயதைக் கடந்தோரும் வாக்காளராக விண்ணப்பிப்பதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்துமாறு மாநிலங்களுக்கு அறிவுறுத்த தலைமைத் தோ்தல் ஆணையா் ராஜீவ் குமாா் தலைமையில் நடைபெற்ற குழுவில் முடிவெடுக்கப்பட்டது.

இதன்மூலமாக ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளா் பட்டியல் புதிதாக மேம்படுத்தப்படும். வாக்காளா்களுக்கும் இந்த முறை எளிதாக இருக்கும். முன்கூட்டியே விண்ணப்பிப்பதன் மூலமாக, 18 வயதைக் கடந்த உடனேயே நடைபெறும் தோ்தலில்கூட சம்பந்தப்பட்ட நபரால் வாக்களிக்க முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.