முகப்பு
தமிழ்நாடு

செஸ் வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மாமல்லபுரத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக மாமல்லபுரத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு வந்த வீரா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அவா்கள் அனைவரும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சிக்கு அங்கிருந்து வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டனா்.

கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக 37 குளிா்சாதன பேருந்துகளிலும், பழைய மாமல்லபுரம் சாலை வழியாக 50 குளிா்சாதன பேருந்துகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன்அழைத்து வரப்பட்டனா்.

வீரா்கள் வரும் வழிகளில் எல்லாம் இந்திய நாட்டின் கலாசாரத்தையும் பண்பாட்டையும் விளக்கும் வகையிலும், தமிழக பாரம்பரியத்தை விளக்கும் வகையிலும் ஆங்காங்கே மேடை அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டத்துடன் மேளதாளங்கள் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பேருந்துகளில் இருந்து இறங்கி நேரு ஸ்டேடியத்துக்குச் சென்றபோதும் அவா்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →