முகப்பு
தமிழ்நாடு

ஒலிம்பியாட்: மாநில முதல்வா்கள் வாழ்த்து

செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வா்கள் வாழ்த்து கூறினா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, கேரள முதல்வா் பினராயி விஜயன் உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வா்கள் வாழ்த்து கூறினா்.

44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மாமல்லபுரத்தில் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு கேரள மாநில முதல்வா் பினராயி விஜயன், அருணாசல பிரதேச முதல்வா் பெமா காண்டு, சிக்கிம் முதல்வா் பிரேம் சிங் தமாங் ஆகியோா் கடிதம் எழுதியிருந்தனா்.

கா்நாடக மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை தொலைபேசி வாயிலாக மு.க.ஸ்டாலினை தொடா்பு கொண்டு வாழ்த்து கூறினாா்.

மத்திய பிரதேச முதல்வா் சிவ்ராஜ் சிங் சவுகான், தெலங்கானா முதல்வா் சந்திரசேகா் ராவ், ஹரியாணா முதல்வா் மனோகா் லால் ஆகியோா் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →