முகப்பு
தமிழ்நாடு

மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் மாணவர்கள் பகுத்தறிவு பாதையில் செல்ல வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-ஆவது பட்டமளிப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்று வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் பல்கலைக்கழக அளவில் பல்வேறு துறைகளில் சிறப்பிடம் பெற்ற 69 மாணவா்களுக்கு பிரதமா் மோடி பதக்கங்களை வழங்கினார்.

இந்நிலையில், விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின், ‘கல்வி என்பது யாராலும் பறிக்க முடியாத சொத்து. பட்டம்பெற்ற நீங்கள்தான் நாட்டை செழிக்கச் செய்யும் வல்லுநர்கள். பழைமைவாதத்தை புறந்தள்ளி புதிய கருத்துகளை ஏற்று மாணவர்கள் பகுத்தறிவு பாதை நடைபோடுவதுடன் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதைத் தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும். தமிழர்கள் தொழிநுட்பத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்கள்’ எனத் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →