தமிழ்நாடு

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 67 பவுன் தங்கம், 2 கிலோ வெள்ளி பொருள்கள் கொள்ளை

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

DIN


கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள வீட்டின் பின்புற கதவை உடைத்து மர்ம நபர்கள் தங்க நகை மற்றும் வெள்ளி பொருள்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்காநல்லூர் காமராஜர் சாலை அருகே உள்ள அலமேலு நகரை சேர்ந்தவர் ஹரிஷ் பாபு. இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை வழக்கம்போல ஹரிஷ் பாபு வேலைக்கு சென்றுள்ளார். 

இதைத் தொடர்ந்து அவருடைய தந்தையும் தாயாரும் வெளியே சென்றுள்ளனர். 

இந்த நிலையில் ஹரிஷ் பாபு அவர் வேலை செய்யும் இடத்தில் உள்ள இளங்கோ என்பவரை வீட்டிற்கு அனுப்பி வீட்டை பூட்டிவிட்டு வரச் சொல்லியுள்ளார். அதன் பின்பு வியாழக்கிழமை காலை வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக ஹரிஷ் பாபுவிற்கு தகவல் தெரியவந்தது. 

அதனைத் தொடர்ந்து ஹரிஷ் பாபு உடனடியாக வீட்டிற்கு விரைந்துள்ளார். அப்போது உள்ளே சென்று பார்க்கும் போது வீட்டில் இருந்த ஆபரண தங்கங்கள், வளையல்கள், வைர நகைகள் என மொத்தம் 67 பவுன் தங்க நகைகளும் 2 கிலோ அளவிலான வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.2 லட்சம் பணத்தையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. 

இதனைத் தொடர்ந்து ஹரிஷ் பாபு உடனடியாக சம்பவம் தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் சிங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்று தடயவியல்  நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளை கைப்பற்றி முதல் கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குப்புசாமி கோப்பை ஹாக்கி போட்டி: அரையிறுதியில் நெல்லை, மதுரை,சென்னை அணிகள்

சமூக வலைதளங்களில் ஜாதிய பதிவுகள் : 82 போ் கைது

விபத்தில் காயமடைந்த தொழிலாளி உயிரிழப்பு

ராணி அண்ணா மகளிா் கல்லூரிக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கக் கோரிக்கை

சுந்தரனாா் பல்கலைக்கழக மாணவா்கள் நெட் தோ்வில் சிறப்பிடம்

SCROLL FOR NEXT