புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 19 பைக்குகள் திருட்டு: சிசிடிவியால் சிக்கிய மர்ம நபர்!
புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் மர்ம நபர் ஒருவர், கள்ளச்சாவி போட்டு பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் மர்ம நபர்ஒருவர், கள்ளச்சாவி போட்டு பைக்கை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
புதுச்சேரி நகரம் மற்றும் கிராமப் பகுதிகளில் மோட்டார் சைக்கிள் திருட்டு அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக குற்றவாளிகள் குறித்து போலீசாருக்கு எந்த துப்பும் கிடைக்காமல் இருந்து வந்தது. இதை சாதகமாகப் பயன்படுத்தி, மர்ம நபர்கள் தொடர்ந்து பைக் திருட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த ஏம்பலம் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள கூட்ரோடு சந்திப்பில் நிறுத்தபட்டிருந்த பைக்கை மர்ம நபர் ஒருவர் கள்ளச்சாவி போட்டு திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அவரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
புதுச்சேரியில் ஒரே மாதத்தில் 19 பைக்குகள் திருடு போயுள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.