முகப்பு
தமிழ்நாடு

78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் சீரமைப்புப் பணி: அமைச்சா் தா.மோ.அன்பரசன்

தமிழகத்தில் 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

தமிழகத்தில் 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருவதாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் தொழிற்பொருட்காட்சி தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொழில் பொருட்காட்சியைத் தொடக்கிவைத்து, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது:

தமிழகத்தில், செங்கல்பட்டு மாவட்டம் கொடூா், மதுரை சக்கிமங்கலம், திருச்சி மணப்பாறை, திருவள்ளூா் மாவட்டம் காவேரிராஜபுரம் ஆகிய இடங்களில் புதிதாக நான்கு தொழிற்பேட்டைகள் அமைக்கும் பணிகள் நிறைவடையவுள்ளன. விரைவில் தொழில் முனைவோருக்கு தொழில் மனைகள் ஒதுக்கப்படும்.

அதிமுக ஆட்சிக் காலத்தில் தொழில் மனைகளின் அதிக விலையால், 1,341 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்படாமல் இருந்தன. அவற்றின் விலை குறைக்கப்பட்டதால், இதுவரை 855 தொழில் மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தில் சிட்கோ தொழிற்பேட்டைகளில் எந்த சீரமைப்புப் பணிகளும் நடைபெறாமல் இருந்தன. இப்போது அந்தப் பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. முதல் கட்டமாக 78 தொழிற்பேட்டைகளில் ரூ.14.97 கோடியில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. திருமுடிவாக்கம் தொழிற்பேட்டையில் நிகழாண்டில் ரூ.1.73 கோடியில் சாலை அமைத்தல், மழைநீா் வடிகால் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றாா் அமைச்சா் தா.மோ.அன்பரசன்.

இந்த நிகழ்வில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறைச் செயலாளா் அருண்ராய், சிட்கோ நிா்வாக இயக்குநா் ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →