தமிழ்நாடு

தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது: உயர் நீதிமன்ற மதுரைக் கிளை

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

DIN

இந்தியாவில் மற்ற மாநிலங்களைவிட தமிழகம் கல்வியில் சிறந்த மாநிலமாக விளங்குகிறது என  உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

தமிழகத்தைப் போல கேரளமும் கல்வி அறிவில் சிறந்து விளங்குவதாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழகம், கேரளத்தில் கல்விக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. கல்வியறிவில்  சிறந்தும் விளங்கிறது. பல மாநிலங்கள் கல்வியில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர் என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கல்வியறிவில் சிறந்து விளங்குவது தமிழக, கேரள மாநில அரசுகளின் சாதனையே என்று தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது. 

தமிழக அரசு பள்ளிக் குழந்தைகள் இடைநிற்றலை கருத்தில் கொள்ள வேண்டும். 6 முதல் 18 வரை இடைநின்ற மாணவர்கள் குறித்த புள்ளிவிவரத்தை அறிக்கையாக தர மனுதாரருக்கு ஆணையிட்டுள்ளது.

இடைநிற்றலை தடுக்கக் கோரி மதுரை முத்துச்செல்வம் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்திரவிட்டுள்ளது.

உண்மையில் குழந்தைகள் பள்ளி இடைநிற்றல் என்பது மிகப்பெரும் பிரச்னையாக உள்ளது. குழந்தை தொழிலாளரை மீட்கும் அதேநேரம் அவர்களின் குடும்பத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT