தமிழ்நாடு

பெண்களுக்கு புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாம்: அமைச்சர் துவக்கி வைத்தார்

மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். 

DIN

பெண்களுக்கு ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாமை சென்னை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று துவக்கி வைத்தார். 

பெண்களுக்கு புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்தில்  ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. 

இந்நிலையில் சென்னையில்  சைதாப்பேட்டை மண்டலத்தில் 15 ஆரம்ப சுகாதார மையங்களில் மகளிருக்கான ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறியும் சிறப்பு முகாமை சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன்  துவக்கி வைத்தார்.

பின்னர் பேசிய அவர், 'தமிழகத்தில் இதுவரை குரங்கு அம்மை பாதிப்பு இல்லை. எனவே, அதுகுறித்து யாரும் அச்சப்படத் தேவையில்லை.

வெளிநாட்டில் இருந்து வருவோரிடம் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது' என்றார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் பிறந்த நாள்

இன்றைய மின்தடை

திருச்செந்தூரில் விஸ்வ பிரம்மா ஜெயந்தி

துணிச்சல் அதிகரிக்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

நாளைய மின் தடை

SCROLL FOR NEXT