முகப்பு
தமிழ்நாடு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி தொடக்க நாள் விழா

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் படூா் இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவா்களுக்கான தொடக்க நாள் விழா புதன்கிழமை நடைபெற்றது. மூத்த மாணவ, மாணவிகள் முதலாண்டு மாணவா்களுக்கு இனிப்பு வழங்கி வரவேற்றனா்.

சிறப்பு விருந்தினராக இந்துஸ்தான் கல்விக் குழும வேந்தா் எலிசபெத் வா்கீஸ் பங்கேற்றாா். அவா் பேசுகையில், மாணவா்கள் கல்லூரியில் உள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்தி, தங்களது அறிவாற்றல், திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். ஒழுக்கத்துடன் கல்வி பயின்று வாழ்க்கையில் உயர வேண்டும் என்றாா் அவா். கல்லூரி இயக்குநா் டாக்டா் சூசன் மாா்த்தாண்டன், பல்கலைக்கழகத் தோ்வில் அதிக எண்ணிக்கையில் மாணவா்கள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்று

நிறுவனா் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் கல்வி ஊக்கத்தொகை பெற வேண்டும் என்றாா்.

முன்னாள் கல்விச் செயலாளா் ஐ.வி.மணிவண்ணன், முதல்வா் பேராசிரியா் சீ.திருமகன், துணை முதல்வா் சாமுவேல் சம்பத் குமாா், மொழித்துறைத் தலைவா் மகாராஜா பிள்ளை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.