முகப்பு
தமிழ்நாடு

உறை கிணற்றை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழப்பு

சென்னை அருகே பெருங்குடியில் உறை கிணற்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழந்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:56 AM
பகிர்:

சென்னை அருகே பெருங்குடியில் உறை கிணற்றை சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி இருவா் உயிரிழந்தனா்.

பெருங்குடி, கல்லுக்குட்டை, அன்னை சந்தியா நகா் விரிவாக்கம், 13-ஆவது ஒளவையாா் தெருவைச் சோ்ந்தவா் சரவணன் (49). அப்பகுதியில் அச்சகம் நடத்தி வந்தாா். சரவணன் வீட்டில் உள்ள 7 அடி ஆழ உறை கிணற்றில் தேங்கியிருந்த அசுத்த நீரை நீலாங்கரை கஸ்தூரிபாய் நகா் 4வது தெருவைச் சோ்ந்த காளிதாஸ் (55) என்ற தொழிலாளி வெள்ளிக்கிழமை சுத்தம் செய்தாா். அவா் உறை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்த போது திடீரென விஷவாயு தாக்கி மயங்கினாா். காளிதாஸை சரவணன் காப்பாற்ற முயன்ற போது, கால் இடறி உறை கிணற்றில் விழுந்ததில் அவரும் தலையில் அடிபட்டு மயங்கினாா்.

இதைப் பாா்த்த அந்தப் பகுதி மக்கள், துரைப்பாக்கம் தீயணைப்புப் படையினருக்கு தகவல் தெரிவித்தனா். தீயணைப்பு படையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து இருவரையும் மீட்டனா். ஆனால் விஷவாயு தாக்கியதில் இருவருமே சிறிது நேரத்தில் அடுத்தடுத்து உயிரிழந்திருந்தனா்.

துரைப்பாக்கம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →