கொடியேற்றத்தின் போது அலங்காரத்துடன் எழுந்தருளி அருள்பாலித்த ஆனந்தவல்லி அம்மன். 
தமிழ்நாடு

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் ஆடித்தபசு திருவிழா தொடக்கம்

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடித்தபசு திருவிழா தொடங்கியது. 

DIN


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்பாள் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை ஆடித்தபசு திருவிழா தொடங்கியது. 

திருவிழா தொடக்கமாக ஆனந்தவல்லி அம்பாள் சன்னதி முன் மண்டபத்தில் உள்ள கொடிமரத்தில் காலை 11:25 மணிக்கு கொடியேற்றம் செய்யப்பட்டது. அதன் பின் கொடிமரத்திற்கு 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடத்தி கொடிமரத்திற்கு தர்ப்பை புல், மலர் மாலைகள் சாற்றி கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. 

அதைத் தொடர்ந்து கோயில் மண்டபத்தில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளியிருந்த ஆனந்தவல்லி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது.  கொடியேற்ற நிகழ்வுகளை கோயில் பரம்பரை தானியம் தெய்வ சிகாமணி என்ற சக்கரைபட்டர்  மற்றும் ராஜேஷ் பட்டர், குமார் பட்டர் உள்ளிட்ட சிவாச்சாரியார்கள் நடத்தி வைத்தனர்.

ஆடித்தபசு  திருவிழா கொடியேற்றம்

கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறும் இந்த திருவிழாவின்போது ஆனந்தவல்லி அம்மன் சர்வ அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அருள்பாலித்து அதன் பின்னர் வீதி உலா வருதல் நடைபெறும். 

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக ஆடித்தபசு விழா ஆகஸ்ட் 9 ஆம் தேதி நடைபெறுகிறது 10 ஆம் தேதி சந்தன காப்பு உற்சவத்துடன் இந்தாண்டடு ஆடித்தபசு திருவிழா நிறைவு பெறுகிறது. ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆனந்தவல்லி அம்மன் கோயில் முழுவதும் மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இரவில் ஜொலிக்கிறது.

மானாமதுரை ஸ்ரீ ஆனந்தவல்லி அம்மன் கோயில் ஆடித்தபசு திருவிழா தொடக்கமாக கொடியேற்றம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT