முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம்: வீட்டின் பூட்டை உடைத்து 10 லட்சம் மதிப்புள்ள ரொக்கம், நகை திருட்டு

வேதாரண்யத்தைச் சேர்ந்த  தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட ரூ.10  மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

Updated On : 31 ஜூலை 2022, 1:20 pm IST
திருடு போன வீடு
பகிர்:

நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த  தோப்புத்துறையில் வீட்டின் பூட்டை உடைத்து நகை உள்ளிட்ட ரூ.10  மதிப்புள்ள பொருள்கள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து ஞாயிற்றுக்கிழமை காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

தோப்புத்துறை பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம். ஈராக் நாட்டில் கடந்த 8 மாதங்களாக வேலை பார்த்து, கடந்த 23ந் தேதி ஊர் திரும்பி உள்ளார்.

இவர், தனது மனைவி , பிள்ளைகளுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு , ஞாயிற்றுக்கிழமை அதிககாலை  வீடு திரும்பினர்.

Advertisement

Advertisement

போது , வீட்டின் கதவு பூட்டை உடைத்து 4 சவரன் தங்க நகை, 3000 அமெரிக்கா டாலர், ஈராக் நாட்டு 3000 ரியால் , ரூ.40 ஆயிரம் ரொக்கம் என ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

இது குறித்து வேதாரண்யம் காவலர் தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மேப்ப நாய் உதவியுடன் விசாரித்து வருகின்றனர்,

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments