தமிழ்நாடு

செஸ் ஒலிம்பியாட்: தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றி

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றி பெற்றுள்ளார்.

DIN

மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தமிழக கிராண்ட் மாஸ்டர் சேதுராமன் வெற்றி பெற்றுள்ளார்.

செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்திய ஓபன் அணியின் சி பிரிவில் பங்கேற்ற அவர் வெற்றி பெற்று அசத்தியுள்ளார்.

ஐஸ்லாந்து வீரர் ஹான்ஸை எதிர்த்து விளையாடிய சேதுராமன் தனது 36வது நகர்வில் அவரை வீழ்த்தினார்.

அதேபோல, மகளிர் பிரிவில் இந்திய மகளிர் அணி பி பிரிவில் விளையாடிய வந்திகா அகர்வால் வெற்றி பெற்றார். அவர், தன்னை எதிர்த்து விளையாடிய இந்தோனேசிய வீராங்கனை சுகந்தரை தனது 45வது நகர்வில் வீழ்த்தினார்.

இந்திய மகளிர் அணி சி பிரிவில் விளையாடிய பிரதியுஷா போடாவும் வெற்றி பெற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதயப்பூர்வம்... மடோனா செபாஸ்டியன்!

விஜய் மீது செருப்பு வீசப்பட்டது ஏன்? - செந்தில் பாலாஜி விளக்கம்!

மதுபாட்டிலுக்கு ரூ. 10 வசூல்: செந்தில் பாலாஜி விளக்கம்!

தேரே இஷ்க் மெய்ன் டீசர்!

மம்மூட்டி - மோகன்லால் படத்தின் டீசர் அப்டேட்!

SCROLL FOR NEXT