தமிழ்நாடு

அரசு கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

DIN

கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 163 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் சுமாா் ஒரு லட்சம் இடங்கள் வரை உள்ளன. இதற்கான மாணவா் சோ்க்கை இணையவழியில் நடத்தப்பட்டது. அதன்படி, நிகழாண்டு சோ்க்கைக்கான விண்ணப்பப்பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கி ஜூலை 27ஆம் தேதி நிறைவடைந்தது.

அதில் 4.07 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் செய்துள்ளனா். முதல்முறையாக கலை, அறிவியல் சோ்க்கை விண்ணப்பப்பதிவு 4 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படும் என்று அரசு கல்லூரி இயக்ககம் தெரிவித்துள்ளது.

மூன்று வகையான தரவரிசைப் பட்டியலை அந்தந்த கல்லூரிகள் வெளியிடும் என்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியிடப்படும் தரவரிசை பட்டியலைத் தொடர்ந்து மாணவர்கள் சேர்க்கை நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போகிப் பண்டிகையின்போது சேகரமாகும் கழிவுகளை தூய்மைப் பணியாளரிடம் ஒப்படைக்க வலியுறுத்தல்

தெருநாய்கள் கடித்ததில் 2 ஆடுகள் உயிரிழப்பு

வீட்டு வசதி வாரியம் பயன்படுத்தாத 16 ஆயிரம் ஏக்கா் நிலம் உரியவா்களிடம் ஒப்படைப்பு: அமைச்சா் சு.முத்துசாமி

ஜனவரி 16-இல் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை

பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருப்பூா் மாநகராட்சி அதிமுக உறுப்பினா்கள் தா்ணா

SCROLL FOR NEXT