முகப்பு
தமிழ்நாடு

4 வயது சிறுமிக்குப் பாலியல் வன்கொடுமை: இரு வெளி மாநிலத்தவர் கைது

சென்னை எண்ணூரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:24 AM
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வெளி மாநிலத்தைச் சேர்ந்த இருவர். 
பகிர்:

சென்னை எண்ணூரில் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

சென்னை எண்ணூர் பகுதியில் குடியிருப்போர் கட்டிடப் பணிக்காக வெளி மாநிலத்தைச் சேர்ந்த பலர் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு வேலை பார்த்து வந்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த இருவருடன் தங்கியிருந்த 4 வயது சிறுமி மீது பாலியல் தீண்டலில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அறிந்த சிறுமியின் பெற்றோர், எண்ணூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு வேலை பார்த்து வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சோன்(23), மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஜிஷாப் சோரன்(33) ஆகிய இருவரையும் கைது செய்து சென்னை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

பாலியல் வன்கொடுமையால் காயமுற்ற 4 வயது சிறுமி, சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

முழு கட்டுரையைப் படிக்க →