தமிழ்நாடு

தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவான கொலையாளி பூந்தமல்லி நீதிமன்றத்தில் சரண்

DIN

போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க மொட்டைத் தலையுடன் கோயில் கோயிலாக சுற்றித் திரிந்த கொலையாளி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

சென்னை வளசரவாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆற்காடு சாலையில் உள்ள குடியிருப்பில் வசித்து வந்தவர் குமரேசன். இவரது மகனான குணசேகரன் முதல் தளத்தில் வசித்து வந்தார்.

கடந்த மாதம் தனது தந்தையை காணவில்லை என அவரது மகள் காஞ்சனமாலா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்ததில் குமரேசனை கொலை செய்து அவரது உடல் காவேரிப் பாக்கம் என்ற இடத்தில் புதைக்கப்பட்டது தெரியவந்தது. மேலும் அவரது மகன் குணசேகரன் தலைமறைவாக இருந்தார். 

தந்தையை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த குணசேகரனை பிடிக்க வளசரவாக்கம் போலீசார்  தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று பூந்தமல்லி நீதிமன்றத்தில் குணசேகரன் தானாகவே முன்வந்து சரண் அடைந்தார். சரணடைந்த குண சேகரனை நீதிமன்றக் காவலில் அடைக்க பூந்தமல்லி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். 

தந்தையை கொலை செய்துவிட்டு போலீசாரிடம் சிக்காமல் இருக்க, மாறு வேடத்தில் இருக்க வேண்டும் என குணசேகரன் மொட்டை அடித்ததாகக் கூறப்படுகிறது. மேலும், தலைமறைவாக இருக்க ஒவ்வொரு பகுதியில் இருக்கும் கோயில்களில் அன்னதானம் சாப்பிட்டு கோயில்களில்யே தங்கியுள்ளார். 

இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த குணசேகரனை போலீசார், போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். விசாரணைக்குப் பின்னர்  கொலைக்கான முழு காரணம்  தெரிய வரும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT