மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் 
தமிழ்நாடு

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்: ஜெ.ராதாகிருஷ்ணன்

கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

DIN

சென்னை: கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சென்னை, செங்கல்பட்டில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 15 ஆம் தேதி நிலவரப்படி தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கை 22 ஆக இருந்த  நிலையில் தற்போது  100-ஐ எட்டியுள்ளது. 

அடுத்தடுத்த நாள்களில் கரோனா பாதிப்பு உயர வாய்ப்பு உள்ளதால் அடுத்த 2 வாரத்திற்கு சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அதன்படி பொதுமக்கள் கூடும் இடங்களில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகள், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற உத்தரவுகள் கடைபிடிக்கப்படுவதை சுகாதாரத்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும் என ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு: ஒருவா் கைது

புதிய வாசககா்களை ஈா்த்துள்ள ஈரோடு புத்தகத் திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் முன்னாள் அமைச்சா்கள் வேலுமணி சுவாமி தரிசனம்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

மகளிா் உரிமைத் தொகை விண்ணப்பப் பதிவில் சிக்கல்

SCROLL FOR NEXT